Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

Arulmigu Sri Bhirama gnanapureeswarar Temple, Keezhkorukai,Kumbakonam, Thanjavur

அருள்மிகு ஸ்ரீ புஷ்பவல்லி அம்மன் உடனுரை அருள்மிகு ஸ்ரீ பிரம்மஞானபுரீஸ்வரர் திருக்கோவில், கீழ்க்கொருக்கை


Arulmigu Sri Bhirama gnanapureeswarar Temple, Keezhkorukai,Kumbakonam, Thanjavur !!



இறைவர் : அருள்மிகு ஸ்ரீ பிரம்மஞானபுரீஸ்வரர்  

இறைவி :அருள்மிகு புஷ்பவல்லி அம்மன்

தல மரம் :பலா மரம்

தீர்த்தம் : அக்னி, காவிாி, பராசர, கம்ச, சந்தர, ஆஞ்சநேய மணிகா்ணிகாகட்டம்.

Thirukadaiur Mullaivana Nathar Temple


அருள்மிகு ஸ்ரீ பிரம்மஞானபுரீஸ்வரர் திருக்கோவில், கீழ்க்கொருக்கை தல வரலாறு.

அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கு வந்து அடிப் பிரதட்சணம் செய்து வழிபாடு செய்தால் தலையெழுத்தே மாறிவிடும். குழந்தைகளின் கல்வியறிவு, வியாபார விருத்தி, மன உளைச்சல் நீங்க, தோஷங்கள் நிவர்த்தியாக இங்கு வழிபாடு செய்கின்றனர். திருமணத் தடை நீங்கவும், மூளை வளர்ச்சிக்கும், குடும்ப ஒற்றுமை வளரவும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது. முந்திரிப்பருப்பு, நிலக் கடலை மாலை கட்டி வெளி மண்டபத்தில் உள்ள இரட்டை நந்திக்கு அணிவித்து பிரார்த்தனை செய்தால் நினைத்தது நடக்கும்.

ஸ்தல வரலாறு :

கோரக்க சித்தர் சிவாலய யாத்திரை சென்ற போது, இத்தலத்திற்கு வந்தார். ஒரு மடத்தில் அவர் தங்கினார். அங்கு ஏற்கனவே பல பக்தர்கள் தங்கியிருந்தனர். அசதியில் நன்றாக உறங்கிவிட்டார். நள்ளிரவில் திடீரென விழிப்பு தட்டவே, கோரக்கருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தன் அருகில் ஒரு பெண் படுத்திருப் பதையும், அவளது சேலைத் தலைப்பு தன் மேல் கிடப்பதையும்கண்டுமிகவும் வருந்தினார்.

இதற்கு பிராயச்சித்தமாக தன் இரு கைகளையும் வெட்டி விட்டார். பின் அந்த மடத்திலேயே சில காலம் தங்கி, அங்குள்ள சந்திர புஷ்கரணியில் நீராடி, வெட்டுப்பட்ட கைகளால் தாளம் போட்டு, ஞானபுரீஸ்வரரையும், புஷ்பவல்லியையும் வணங்கி வந்தார். கோரக்கரின் பக்தியில் மகிழ்ந்த சிவனின் அருளால் சித்தருக்கு மீண்டும் கை கிடைத்தது. கோரக்கரின் கை வெட்டுப்பட்ட தலம் என்பதால் இவ்வூருக்கு கோரக்கை எனவும், தனது குறுகிய கைகளால் பூஜை செய்ததால் குறுக்கை எனவும் வழங்கப்பட்டு தற்போது கொருக்கை என மாறி விட்டது. சுவாமி பெயர்க்காரணம்: பிரம்மனிடம் இருந்த வேதத்திரட்டுக்களை மது, கைடப அசுரர்கள் கடலுக்கடியில் ஒளித்து வைத்தனர். இதை மகாவிஷ்ணு மீட்டுக் கொடுத்தார். இருந்தாலும் பிரம்மனால் முன்பு போல் இயல்பாக படைப்புத்தொழிலை செய்ய முடியவில்லை. எனவே, அவர் விஷ்ணுவின் ஆலோசனைப்படி இத்தலம் வந்து, சந்திர புஷ்கரிணியில் நீராடி, அடிப்பிரதட்சணம் செய்து சிவனை வழிபட்டு வந்தார். ஒரு ஆவணி அவிட்ட நட்சத்திர நாளில், சிவன் பிரம்மனுக்கு ஞானம் கொடுத்தார். இதனால் பிரம்மா மீண்டும் சிறப்பாக படைப்புத்தொழில் புரிந்தார். இதனால் இத்தல இறைவன் பிரம்ம ஞான புரீஸ்வரர் ஆனார். பிரம்மனுக்கு அவிட்ட நட்சத்திர தினத்தில் ஞானம் கிடைத்ததால் இத்தலம் அவிட்ட நட்சத்திரத்திற்குரிய தலமானது.



திருக்கோயில் முகவரி :

அருள்மிகு ஸ்ரீ பிரம்மஞானபுரீஸ்வரர் திருக்கோவில்
கீழ்க்கொருக்கை,
கும்பகோணம் வட்டம்,
தஞ்சை மாவட்டம்



திருக்கோயில் திறக்கும் நேரம்:

திறக்கும் நேரம் : காலை 11 - மதியம் 1 மணி, மாலை 5 - 6 மணி.



அமைவிடம்:

கும்பகோணம் மகாமகக்குளம் மேற்குக் கரையிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் கோயில்அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து தாராசுரம், முழையூர் வழியாக மருதாநல்லூர் செல்லும் பஸ்களில் கொருக்கை செல்லலாம்.